பழவேற்காட்டில் போதை ஒழிப்பு, பாலியல் சீண்டல் குறித்த விழிப்புணர்வு பேரணி
பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட போதை ஒழிப்பு மற்றும் பாலியல் சீண்டல் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, பழவேற்காட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் சீண்டல் சம்பவங்களாலும் போதை வஸ்துக்கள் அதிகரித்து காணப்படுவதாலும் இதனை தடுக்கும் வண்ணம் பழவேற்காடு ஜகதாம்பாள் சுப்பிரமணியம் அரசினர் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் மற்றும் தற்போது பயிலும் பள்ளி மாணவர்கள் இணைந்து போதை ஒழிப்பு மற்றும் பாலியல் சீண்டல் குறித்த விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.
இதில் பழவேற்பாடு பகுதியில் இயங்கி வரும் ஜகதாம்பாள் சுப்பிரமணியம் அரசினர் மேல்நிலைப்பள்ளி, செயின்ட் ஜோசப் உயர்நிலைப்பள்ளி, நேஷனல் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி, ஜமீலாபாத் அரசினர் உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
மேலும் இப்பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், இதர ஆசிரியர்கள், நான்கு பஞ்சாயத்துகளைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள், கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள், பழவேற்காட்டில் இயங்கி வரும் சமூக தொண்டு அமைப்புகள், வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறையினர், பொதுமக்கள் என சுமார் ஆயிரத்து 60 பேர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.
பேரணியானது பழவேற்காடு ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு தொடங்கி பழவேற்காடு பேருந்து நிலையம், பஜார் வீதி வழியாக பழவேற்காடு மீன் அங்காடி பகுதிக்கு வந்து அடைந்து அங்கு போதை எதிர்ப்பு மற்றும் பாலியல் சீண்டல் எதிர்ப்பு குறித்த உறுதி ஏற்பு நடைபெற்றது.
இந்த பேரணியில் மாணவ மாணவிகள் போதை வஸ்து மற்றும் பாலியல் சீண்டலுக்கு எதிரான வாசகங்களையும், பதாகைகளையும் கையில் ஏந்தி பேனர்களை சுமந்தபடி பேண்ட் வாத்தியம் முழங்க பேரணியாக சென்று பொதுமக்கள் மத்தியிலும் மற்றும் வியாபாரிகள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu