அழிஞ்சிவாக்கம்: தடுப்பூசி முகாம்- சுதர்சனம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்!

அழிஞ்சிவாக்கம்: தடுப்பூசி முகாம்- சுதர்சனம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்!
X

கொரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்களிடம், சுதர்சனம் எம்எல்ஏ விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்.

அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாமை மாதவரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சுதர்சனம் துவக்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் தமிழக அரசின் உத்தரவின்படி கொரோனா இரண்டாம் அலை தடுப்பு நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.

இந்த முகாமிற்கு மாதவரம் சட்டமன்ற திமுக உறுப்பினர் எஸ். சுதர்சனம் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தனர்.

பின்னர் கொரோனா தடுப்பூசி செலுத்துவதன் நன்மைகளை குறித்து பொதுமக்களிடையே தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதனை தொடர்ந்து அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி, சத்து மாத்திரைகளையும் வழங்கினர்.

இதில் ஊராட்சி மன்ற துணை தலைவர் செல்வி, மதுரை முத்து ஊராட்சி செயலாளர் உள்ளிட்டோர் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!