தச்சூரில் அதிமுக சார்பில் மே தின விழா மாபெரும் பொதுக்கூட்டம்

தச்சூரில் அதிமுக சார்பில் மே தின விழா மாபெரும் பொதுக்கூட்டம்
X

தச்சூரில் அதிமுக சார்பில் மே தின விழா மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தச்சூரில் அதிமுக சார்பில் மே தின விழா மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட சோழவரம் ஒன்றியம் பஞ்செட்டி ஊராட்சியில் உள்ள தச்சூர் கூட்டுச் சாலை பகுதியில் அதிமுக திருவள்ளூர் வடக்கு மாவட்டம் சார்பில் மே தின விழா மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பொன்னேரி தொகுதி எம்எல்ஏவுமான சிறுனியம் பலராமன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கழக வர்த்தக அணி செயலாளர் வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் சிறப்புரையாற்றினர்.

நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட, ஒன்றிய நகர, பேரூராட்சி, கிளை கழக நிர்வாகிகள், பிறஅணி நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகி கள்,கழக செயல்வீரர்கள், செயல் வீராங்கனைகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அதிமுக திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழகம் செய்திருந்தது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!