பொன்னேரியில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

பொன்னேரியில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பொன்னேரியில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பொன்னேரியில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம், போலி மதுபானங்களால் உயிரிழப்பு ஏற்படுவதாக கூறி திருவள்ளூர் அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன் தலைமையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அண்ணாசிலை அருகில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

இதில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர். அப்போது கள்ளச்சாராயத்தாலும், போலி மதுபானங்களாலும் உயிரிழப்புகள் தொடர்வதாகவும், அதற்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் எனவும் ஆர்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Tags

Next Story