தச்சூர் கூட்டுச் சாலையில் வடக்கு அதிமுக சார்பில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம்.

தச்சூர் கூட்டுச் சாலையில் வடக்கு அதிமுக சார்பில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம்.
X

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தச்சூர் கூட்டுச் சாலையில் நடைபெற்ற வடக்கு அதிமுக ஆலோசனை கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் வடக்கு அதிமுக சார்பில் தச்சூரில் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பலராமன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சசிகலாவுடன் அதிமுக நிர்வாகிகள் எந்த தொடர்பும் வைக்கக்கூடாது.

அப்படி தொடர்பில் இருந்தால் கட்சியில் இருந்து நீக்கபடுவர் என்றும், சசிகலா அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லை. கட்சித் தொண்டர்களிடம் அவர் தொலைபேசியில் பேசி ஒரு தாய் வயிற்று பிள்ளைகளாக கட்சிப் பணியாற்றி வரும் தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதை வன்மையாக கண்டிக்கிறோம்.

அதிமுகவிற்கும், சசிகலாவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை இந்த கூட்டத்தின் மூலம் உறுதிபட தெரிவித்து கொள்கிறோம்.

அவருடன பேசும் அனைவரின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால கட்சியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நேரம் இது. துரோகிகளுக்கு கட்சியில் என்றுமே இடமில்லை.என்று கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!