அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கொலை: 10 பேர் கைது
பைல் படம்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த மீஞ்சூர் அருகே உள்ள கொண்டைக்கரை ஊராட்சி மன்ற தலைவராக இரண்டாவது முறை வெற்றி பெற்று பொறுப்பு வகித்து வந்தவர் அதிமுகவைச் சேர்ந்த மனோகரன்(38). கடந்த 15-ம் தேதி இரவு மனோகரன் குடும்பத்துடன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவர் வந்து கொண்டிருந்த காரை லாரிகள் மோதி பின்னர் லாரியில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் மனோகரனை தன் குடும்பத்தினர் முன்பு அரிவாளால் வெட்டி கொலை கொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த கிராம மக்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று சாலை மறியலில் ஈடுபட்டனர்
இதுகுறித்து, மீஞ்சூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து 2 தனிப்படைகளை அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அந்த விசாரணையின் அடிப்படையில், மீஞ்சூர் அருகே உள்ள வெள்ளிவாயல் சாவடியை சேர்ந்த சுந்தரபாண்டியன்(43), அவரது ஓட்டுநர் பத்மநாபன், உறவினர் அரவிந்த் குமார் மற்றும் கூட்டாளிகள் ராஜ்குமார் என்கிற பாட்டில் ராஜ், கிளி யுவராஜ், ஆகாஷ், யுவராஜ், மது, கோபால கிருஷ்ணன், சூர்யா என 10 பேரை நேற்று போலீஸார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், வல்லூர் அனல் மின் நிலைய சாம்பல் கழிவுகளை அகற்றும் பணிக்கான ஒப்பந்தம் எடுத்த கொண்டைக்கரை ஊராட்சி தலைவர் மனோகரன், லாரி உரிமையாளரான சுந்தரபாண்டியனுக்கு லோடு வழங்காததால் ஏற்பட்ட விரோதம் காரணமாக ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் தீர்த்துக்கட்ட முடிவு செய்ததாக தெரிய வந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. மேலும் இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu