ஆரணி பேருராட்சியில் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்

ஆரணி பேருராட்சியில் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்
X

ஆரணியில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

ஆரணியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்தில் உள்ளது ஆரணி பேரூராட்சி இங்கு 15 வார்டுகள் 13 இடங்களில் அதிமுக வேட்பாளர்களும் இரண்டு இடங்களில் புரட்சி பாரதம் 1 தமிழ் மாநில காங்கிரஸ் 1 இடங்களை ஒதுக்கப்பட்டுள்ளது இந்தநிலையில் நேற்று வேட்பாளர் அறிமுக ஆலோசனை கூட்டம் ஆரணியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு அ.தி.மு.க. திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளரும் பொன்னேரி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிறுனியம் பலராமன் தலைமை தாங்கி ஆரணி பேரூராட்சியில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளான தமிழ்மாநில காங்கிரஸ் புரட்சிபாரதம் உள்ளிட்ட வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து வெற்றி பெறுவது குறித்து ஆலோசனை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பொன்னேரி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ பொன்ராஜா, சோழவரம் ஒன்றிய செயலாளர் பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் பொன்னுதுரை, எம்ஜிஆர் மன்ற மாவட்ட தலைவர் சுதாகர், அன்பழகன், நகர செயலாளர் தயாளன், முன்னாள் ஒன்றிய செயலாளர் வடக்கு நல்லூர் நடராஜன், சின்னம்பேடு கூட்டுறவு சங்க தலைவர் கே.தனஞ்செழியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!