பொன்னேரியில் மத்திய அரசை கண்டித்து விவசாய தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பொன்னேரியில் மத்திய அரசை கண்டித்து விவசாய தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X
பொன்னேரியில் விவசாய தொழிற்சங்கத்தினர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பொன்னேரியில் பாஜக அரசை கண்டித்து விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பொன்னேரியில் ஒன்றிய அரசை கண்டித்து விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் உள்ள 11கோடி தொழிலாளர்கள் வயிற்றில் அடிப்பதாக கூறி மத்திய அரசை கண்டித்து முழக்கமிட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ஒன்றிய அரசை கண்டித்து விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் உள்ள 11கோடி தொழிலாளர்கள் வயிற்றில் அடிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். ஆதார் இணைப்பு என்ற பெயரில் தொழிலாளர்களை வேலையில் இருந்து நீக்கியதை கண்டித்தும், 2024.ஆம் ஆண்டில் 3.லட்சம் கோடி நிதி ஒதுக்கிட வேண்டும், ஆதார் இணைப்புடன் கூடிய பணபரிவர்தனையை கைவிட வேண்டும், 100 நாள் வேலையை அதிகரித்து ஆண்டுக்கு 200.நாட்கள் வேலையாக வழங்கி, நாள் ஒன்றுக்கு 600ருபாய் கூலி வழங்கிட வேண்டும், 15.நாட்களுக்குள் சம்பளம் கிடப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும் ஏற்கனவே நிலுவையில் உள்ள 100 நாள் வேலை பணியாளர்கள் சம்பளத்தை உடனடியாக வழங்கிட வேண்டும், சில இடங்களில் பணியாளர்களுக்கு குடிநீர் வசதி இன்றியும் தவிப்பதாகவும் இது போன்ற நிலைமை நீடிக்காமல் அவர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!