/* */

25 ஆண்டுகளுக்குப்பின் அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்கள்- ஆசிரியர்கள் சந்திப்பு

பொன்னேரி அருகே 25 ஆண்டுகளுக்குப்பின் அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்கள்- ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

25 ஆண்டுகளுக்குப்பின் அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்கள்- ஆசிரியர்கள் சந்திப்பு
X

பொன்னேரி அருகே திருவெள்ளைவாயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 25 ஆண்டுகளுக்குப்பின் அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்கள்- ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த திருவெள்ளைவாயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1998ம் ஆண்டு கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீண்டும் சந்திக்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

கடந்த 1998ம் கல்வி ஆண்டில் படித்த முன்னாள் மாணவர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். பள்ளிக்கு வருகை தந்த முன்னாள் மாணவர்கள் தங்களுக்கு கல்வி பயிற்றுவித்த ஆசிரியர்களின் கால்களில் விழுந்து வணங்கி ஆசி பெற்றனர்.

இதனைததொடர்ந்து அனைவரும் செல்ஃபி எடுத்து தங்கள் 25 ஆண்டுகளின் முந்தைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். பள்ளியின் சிதிலமடைந்த கட்டிடங்களை புதுப்பித்து கொடுத்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, தங்களுக்கு கல்வி பயிற்றுவித்த பள்ளிக்கு நன்றி கடன் செலுத்தினர். தொடர்ந்து அனைவரும் ஒன்றிணைந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Updated On: 26 Feb 2023 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?