பொன்னேரி தர்காவில் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் திடீர் பிரார்த்தனை

பொன்னேரி தர்காவில் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் திடீர் பிரார்த்தனை
X

பிரார்த்தனையில் ஈடுபட்ட சுதாகரன்.

Jayalalitha Son -பொன்னேரி ஹஸ்ரத் சையத் அதாவுல்லா ஷா காவிரி தர்காவில் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் திடீர் பிரார்த்தனை ஈடுபட்டார்.

Jayalalitha Son -திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் பிரசித்திப்பெற்ற ஹஸ்ரத் சையத் அதாவுல்லா ஷா தர்கா உள்ளது. சாதி, மத வேறுபாடு இன்றி அனைத்து மதத்தினரும் இந்த தர்காவில் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனான சுதாகரன், இந்த தர்காவில் இரவு சிறப்பு பிரார்த்தனை செய்தார். அப்போது சுமார் ஒரு மணி நேரம் கண்களை மூடியபடி அவர் தியானத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. கடந்த 1991 முதல் 1996 வரை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 100 கோடி ரூபாய் செலவு செய்து சுதாகரனுக்கு திருமணம் செய்து வைத்தார்.

பின்னர் வருமானத்திற்கு அதிகமாக ஜெயலலிதா சொத்து சேர்த்ததாக சுப்பிரமணியசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு துறையினர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, வளர்ப்பு மகன் சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு பதிவு செய்தனர். சென்னையில் நடைபெற்ற இந்த வழக்கு அப்போதைய திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் கோரிக்கையை ஏற்று, 2004 ஆம் ஆண்டு கர்நாடக நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இறுதியில் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா நான்கு ஆண்டுகள் சிறை்த்தண்டனையும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், சசிகலா உள்ளிட்டோருக்கு தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்தார்.

இதனை எதிர்த்து, ஜெயலலிதா தரப்பு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் செய்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி, 2015 ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரும் நிரபராதிகள் என தீர்ப்பளித்தார். இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணிய சுவாமியும், திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கர்நாடக சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது.

மேலும் ஜெயலலிதா மரணமடைந்து விட்டதால் இவ்வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். 21 ஆண்டுகளுக்கு பிறகு சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றனர். தண்டனை முடிந்து சசிகலா வெளியில் வந்த நிலையில், ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் சசிகலா தரப்பிற்கு எதிராக அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

இந்த நிலையில் அவரது உறவினரான சுதாகரன் தர்காவில் சிறப்பு பிரார்த்தனை செய்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து சுதாகரனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, தன்னை இங்கு வருமாறு அம்மா (ஜெயலலிதா) அழைத்ததாகவும் அதன் பேரிலேயே பிரார்த்தனை செய்ய வந்ததாகவும் அவர் கூறினார். சுதாகரன் தர்காவில் பிரார்த்தனை செய்ய வந்ததை அறிந்து அவரைப் பார்ப்பதற்காக ஏராளமானோர் அங்கு குவிந்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
வளர்ந்து வரும் மருத்துவத்தில் AI யின் புதிய வெற்றிகள்!