வைத்தியநாத சுவாமி கோவிலில் ஆடிமாத பிரதோஷ விழா
![வைத்தியநாத சுவாமி கோவிலில் ஆடிமாத பிரதோஷ விழா வைத்தியநாத சுவாமி கோவிலில் ஆடிமாத பிரதோஷ விழா](https://www.nativenews.in/h-upload/2024/08/02/1936485-img-20240802-wa0003.webp)
வைத்தியநாத சுவாமி கோவிலில் ஆடிமாத பிரதோஷ விழா நடைபெற்றது.
பொன்னேரி அருகே வேண்பாக்கம் வைத்தியநாத சுவாமி கோவிலில் ஆடிமாத பிரதோஷ விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று சிவபெருமானை தரிசித்து சென்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த வேண்பாக்கத்தில் சுமார் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை சமீபத்தில் இக்கோவிலை புதுப்பிக்கப்பட்டு கடந்த மாதம் 8.ஆம் தேதி அன்று மஹா கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இதையடுத்து 48 நாட்கள் மண்டல அபிஷேகம் விழா சிறப்பாக நடைபெற்று வந்த நிலையில் நாள்தோறும் சிவபெருமானுக்கும், பார்வதி தாயாருக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து இந்த கோவிலின் ஆடி மாத தேய்பிறை பிரதோஷ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.கும்பாபிஷேகம் முடிந்தபின் வரும் இரண்டாம் பிரதோஷம் என்பதால் ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்.பிரதோஷ விழாவை முன்னிட்டு அதிகாலை வைத்தியநாத சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் விஷேச வழிபாடு நடத்தப்பட்டது.
விழாவின் சிறப்பம்சமாக ஆலயத்தில் உள்ள நந்தீஸ்வரருக்கு பால், தேன்,பன்னீர், ஜவ்வாது தயிர், திருநீர், சந்தனம், இளநீர், மஞ்சள்,குங்குமம் உள்ளிட்ட நறுமண திரவியங்களுடன் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது, இதனைத் தொடர்ந்து நந்தி பகவானுக்கு பிடித்த அருகம்புல், பழைய வகைகளை படைத்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது இந்த அபிஷேகத்தை பக்தர்கள் கண்குளிர கண்டு பக்திப்பெருக்குடன் வணங்கினர்.இதை தொடர்ந்து மேளதாளம் முழங்க தையல்நாயகி சகிதமாக வைத்தியநாத சுவாமி மூன்று முறை பிரகார உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த பிரதோஷ விழாவில் பங்கேற்ற சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu