பொன்னேரி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொன்று நகைகள் கொள்ளை

பொன்னேரி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொன்று நகைகள் கொள்ளை
X

கொலை நடந்த வீட்டில் போலீசார் விசாரணை நடத்தினர்.

பொன்னேரி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலைசெய்து தாலி சங்கிலி பறித்த நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

பொன்னேரி அருகே தங்க நகைக்காக வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்து தாலி சங்கிலி பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த கூடுவாஞ்சேரி ஊராட்சிக்குட்பட்ட கனகவல்லிபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் குமார். இவர் முன்னாள் மின்சார துறையில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றார். இவரது மனைவி சரஸ்வதி( வயது 53) வீட்டில் தனியாக இருந்த நேரம் பார்த்து மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து சரஸ்வதியை கூர்மையான ஆயுதங்களால் தாக்கி விட்டு கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்து சென்றுள்ளனர்.

பொன்னேரிக்கு சென்று வீட்டிற்கு வந்த கணவர் குமார் உள்ளே வந்து பார்த்தபோது மனைவி சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். இதனை அறிந்த அருகில் உள்ளவர்களை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது நிலைமையைக் கண்டு உடனடியாக 108 அவசர உறுதிக்கு,பொன்னேரி காவல் துறையினருக்கும் தகவல் அளித்துள்ளார், 108-ல் வந்த ஆம்புலன்ஸ் மருத்துவர்கள் சரஸ்வதியை பரிசோதனை செய்தபோது ஏற்கனவே சரஸ்வதி இறந்து விட்டதாகவும் தெரிவித்தனர்.

மற்றும் பொன்னேரி காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில் தகவல் அறிந்து சென்னை உதவி கமிஷனர் சபாபதி சம்பவ இடத்துக்கு நேரில் வந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் ஏதாவது உள்ளதா என்று விசாரணை மேற்கொண்டார். நகைக்காக வீட்டில் தனியாக இருந்த பெண்ணை அடித்து கொன்ற சம்பவம் பகுதியில் வெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்