சோழவரம் அருகே வெள்ளநீர் வெளியேற்றுவது குறித்து அதிகாரிகள் குழு ஆய்வு
சோழவரம் அருகே விச்சூர், வெள்ளிவாயல் பகுதியில் வெள்ளநீர் வெளியேற்றுவது குறித்து ஆய்வு செய்த அதிகாரிகள் குழுவினர்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்துள்ள விச்சூர் வெள்ளிவாயல் ஊராட்சிகள் இந்த பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு பெய்த மழையால் பல்வேறு இடங்களில் வெள்ளநீர சூழ்ந்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். இதனைத்தொடர்ந்து வெள்ளநீர் மற்றும் உபரிநீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் செல்லாமல் எளிதாக செல்லும் வழியில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து பூண்டி மற்றும் பழல் ஏரிகளில் உபரிநீர் செல்லும் கொசஸ் தலை ஆறு மற்றும் கால்வாயை தமிழக அரசு சிறப்பு ஆலோசனை குழுவினர் ஆய்வு செய்தனர்.
இந்த குழு பூண்டி ஏரியிலிருந்து எண்ணூர் வரை செல்லும் கொசஸ்தலை ஆற்றின் கரை மற்றும் புழல் ஏரி உபரி நீர் செல்ல கூடிய ஆமுல்லை வாயில் மற்றும் இருளர் காலனி கால்வாய் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது இனிவரும் காலங்களில் கன மழை பெய்தால் உபரி நீர் குடியிருப்புகள் புகும் அபாயம் ஏற்படாமல் என்பது குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் அடிப்படை கொசஸ்தலை ஆறு மற்றும் புழல் ஏரி உபரி நீர் கால்வாய் கரைகள் நிரந்தரமாக சீரமைக்க திட்ட வரைவு தயாரிக்கப்படும் என்று தெரிவித்தனர்.
ஆய்வின் பொதுப்பணித்துறை மாவட்ட செயற்பொறியாளர் திலகம், உதவி செயற்பொறியாளர் சதீஷ்குமார், கமிட்டி உறுப்பினர் பாலாஜி, மண்டல துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர் சந்தானலட்சுமி கிராம நிர்வாக அலுவலர்கள், விச்சூர் வெள்ளிவாயல் ஒன்றிய கவுன்சிலர் ஷகிலா சகாதேவன் ஆகியோர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu