/* */

பொன்னேரி அருகே கோடை விடுமுறை ஒரு மாத கால பயிற்சி நிறைவு விழா

பொன்னேரி அருகே கோடை விடுமுறையையொட்டி ஒரு மாத கால பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

பொன்னேரி அருகே கோடை விடுமுறை ஒரு மாத கால பயிற்சி நிறைவு விழா
X

பயிற்சி நிறைவு விழாவில் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

பொன்னேரி அருகே பரிக்குப்பட்டு கிராமத்தில் கற்றல்-2023 என்னும் தலைப்பில் கலை,கல்வி, விளையாட்டுபிரிவுகளில் ஒரு மாத கால பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.

கோடை விடுமுறையை பள்ளி மாணவ மாணவிகள் பயனுள்ளதாக கழிப்பதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதனை மாணவர்களும் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே உள்ள பரிக்குப்பட்டு கிராமத்தில் டாக்டர் அம்பேத்கர் கல்வி நிலையம்,முன் செல் கல்வி அறக்கட்டளை,பிளாக் செலக்ட் ஸ்போர்ட்ஸ் ஆகிய அமைப்புகள் இணைந்து கோடை விடுமுறையை முன்னிட்டு பள்ளி மாணவ,மாணவியர்களுக்கு இலவச கோடைகால முகாமாக கலை,கல்வி,விளையாட்டுக்கள் அடங்கிய கற்றல்-2023 என்னும் தலைப்பில் பல்வேறு பயிற்சிகளை அளித்து வந்தனர்.குறிப்பாக சிலம்பாட்டம்,பறையாட்டம்,தெருக்கூத்து,வீதி நாடகம் மற்றும் விளையாட்டுப் போட்டிகள்,வாசிப்பு பயிற்சி,ஆங்கில பயிற்சி,எழுத்துப் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் முகாமில் நடைபெற்றது. இந்த பயிற்சியில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர்கள் கலந்துகொண்டு ஆர்வமாக பயிற்சி பெற்றனர்.

அதன் நிறைவு விழா பரிக்குப்பட்டு கிராமத்திலுள்ள சமுதாயக்கூடத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தன்னார்வல மாணவர்கள்,பெற்றோர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள்,சிலம்பாட்டங்கள்,பறையாட்டம் நடைபெற்றது விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள்,சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Updated On: 26 May 2023 9:49 AM GMT

Related News