மெட்ரோ குடிநீர் ஒப்பந்த ஊழியர்கள் சம்பளம் உயர்வு கேட்டு உள்ளிருப்பு போராட்டம்
பைல் படம்
புழல் ஏரி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 50க்கும் மேற்பட்டோர் பணிசெய்ய செல்லாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தனியார் நிறுவனம் இரண்டரை ஆண்டுகாலமாக ஊழியருக்கு சம்பளம் மற்றும் ஊதிய உயர்வு தராமல் அலைக்கழித்து வருவதாக குற்றம் சாட்டினர்.
இதனால் இங்கு பணிபுரியும் அனைத்து ஒப்பந்த ஊழியர்கள் மிகவும் இன்னலுக்கு ஆளானதாக பலமுறை சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் இதைப்பற்றி முறையிட்டும் கண்டுகொள்ளாத அதிகாரிகளின் மெத்தன போக்கை கண்டித்து குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரிய ஊழியர்கள் மற்றும் பெண்கள் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்டோர் புழல் ஏரி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின்போது நிர்வாகத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். உடனடியாக சம்பந்தப்பட்ட நிர்வாகம் தலையிட்டு சரியான முறையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமெனவும் தவறும் பட்சத்தில் மேலும் இந்த உள்ளிருப்பு போராட்டம் காலவரையற்ற போராட்டம் தொடரும் எனவும் ஊழியர்கள் அப்போது தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu