பொன்னேரி அருகே வடமாநில தொழிலாளி மரத்தில் தூக்கிட்டு தற்கொலை

பொன்னேரி அருகே வடமாநில தொழிலாளி மரத்தில் தூக்கிட்டு தற்கொலை
X

தற்கொலை செய்து கொண்ட வடமாநில தொழிலாளி சஷிகாந்த் கொடுவா.

பொன்னேரி அருகே மரத்தில் வட மாநில தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொன்னேரி அருகே மரத்தில் தூக்கிடப்பட்ட நிலையில் வடமாநில தொழிலாளி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் அடித்துக் கொலையா, தற்கொலையா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த தடபெரும்பாக்கம் பகுதியில் உள்ள அத்திமரம் ஒன்றில் ஆண் ஒருவர் தூக்கிட்ட நிலையில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக பொன்னேரி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் தூக்கிட்ட நிலையில் கிடந்த நபரை பார்த்தபோது அவர் வட மாநில தொழிலாளி என தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சடலத்தை கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூறு ஆய்விற்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் பொன்னேரி அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள தனியார் சிமெண்ட் குடோனில் அந்த நபர் பணியாற்றி வந்ததும், இவர் ஒடிசாவை சேர்ந்த சஷிகாந்தா கொடுவா என்பதும் இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் இருப்பதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.

தூக்கிட்ட நிலையில் மரத்தில் கிடந்ததால் இவரை யாரேனும் அடித்து கொலை செய்து மரத்தில் தொங்க விட்டார்களா, அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. குடும்ப தகராறு காரணமாக இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். அதிகாலை நேரத்தில் வட மாநில தொழிலாளி தூக்கிட்ட நிலையில் மரத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு