சோழவரம் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி பாம்பு கடித்து உயிரிழப்பு

சோழவரம் அருகே  விளையாடிக் கொண்டிருந்த சிறுமி பாம்பு கடித்து உயிரிழப்பு
X
சோழவரம் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தாள்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே புதிய எருமை வெட்டிபாளையம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளை உள்ளது.இந்த செங்கல் சூளையில் பாண்டிச்சேரியை சேர்ந்த முத்துராமன் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றார். இந்த நிலையில் நேற்று முத்துராமன் மகள் வைஷ்ணவி (வயது 7) செங்கல் சூளையின் பின்புறம் விளையாடி கொண்டிருந்தாள்.

அப்போது சிறுமியை விஷ பாம்பு கடித்து சிறுமி கூச்சலிட்டதையடுத்து இதனை அறிந்த பெற்றோர்கள் . உடனே சிறுமியை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியில் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த சோழவரம் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பாம்பு கடித்து சிறுமி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ai marketing future