வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிப்பு

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த   பெண்ணிடம்   நகை பறிப்பு
X
பொன்னேரி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து தங்க நகை பறித்து செல்லப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வேன்பாக்கம் தசரத நகரில் நீதிபதி, மேஜிஸ்திரேட் என முக்கிய அரசு அலுவலர்கள் வசித்து வருகின்றனர். இவர்களது வீடுகளின் அருகே லாரி மெக்கானிக் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். நேற்றிரவு வீட்டை உள்பக்கம் பூட்டிவிட்டு குடும்பத்துடன் தூங்கி கொண்டு இருந்தார்.

அதிகாலை 3 மணியளவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர் ஒருவர் கோபாலகிருஷ்ணன் மனைவி சாந்தகுமாரி கழுத்தில் இருந்த 10 சவரன் தாலி சங்கிலி மற்றும் தங்க நகைகளை பறித்து கொண்டு வெளியே காத்திருந்த தனது கூட்டாளியுடன் தப்பிச்சென்றனர்.

இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து கைரேகை நிபுணர்களை வரவைத்து கை ரேகைகளை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare