திருவள்ளூர் அருகே கடலில் தவறி விழுந்து மீனவர் பலி

திருவள்ளூர் அருகே கடலில் தவறி விழுந்து மீனவர் பலி
X

உயிரிழந்த மீனவர் ராமன்.

திருவள்ளூர் அருகே கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது படகில் இருந்து தவறி விழுந்து மீனவர் பலியானார்.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு சாத்தான் குப்பத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் மீனவர் ராமன் (37).இவர் அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் நாள்தோறும் கடலுக்குச் சென்று மீன்பிடி தொழில் செய்து வந்தார்.

ராமன் பழவேற்காடு முகத்துவாரம் என்ற கடல் பகுதியிலிருந்து 16 கி.மீ. தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது காற்று பலமாக அடித்ததால் மீனவர் ராமன் நிலை தடுமாறி படகிலிருந்து தவறி கடலில் விழுந்துள்ளார். உடன் சென்ற மீனவர்கள் உடனே கடலில் குதித்து அவரை மீட்டனர். ஆனால் அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

இது குறித்து சக மீனவர்கள் திருப்பாலைவனம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதைத் தொடர்ந்து அங்கு வந்த காவல் துறையினர், சடலத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திருவ

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!