மீஞ்சூர் அருகே தனியார் ரப்பர் குடோனில் தீ விபத்து

மீஞ்சூர் அருகே தனியார் ரப்பர் குடோனில் தீ விபத்து
X

தீவிபத்து ஏற்பட்ட ரப்பர் குடோன்.

மீஞ்சூர் அருகே தனியார் ரப்பர் குடோனில் தீ விபத்து ஏற்பட்டதில் கரும்புகை வெளியேறியதால் பரபரப்பு நிலவியது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, மீஞ்சூர் அடுத்த நாலூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பழைய ரப்பர் சேகரிக்கும் குடோன் இயங்கி வருகிறது. இங்கு தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் பழைய கன்வேயர் பெல்ட் வாங்கி சிறிய சிறிய ரப்பர் துண்டுக்களாக நறுக்கி அனுப்பப்பட்டு வருகிறது.

இன்று காலை வழக்கம் போல ஊழியர்கள் ரப்பர்களை துகளாக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பழைய ரப்பர் பொருட்களில் திடீரென தீப்பற்றி கரும்புகையுடன் கொழுந்து விட்டு எரிந்தது. இந்த தீ விபத்து குறித்து அளிக்கப்பட தகவலின் பேரில் பொன்னேரி தீயணைப்பு வீரர்கள்சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ரப்பர் பொருட்களில் எளிதில் தீப்பற்றிய நிலையில் தொடர்ந்து ரசாயன நுரையையும், தண்ணீரையும் பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர். தொடர்ந்து ஜெ.சி.பி இயந்திரத்தின் உதவியுடன் ரப்பர் பொருட்களை கிளறி மீண்டும் தீப்பிடிக்காமல் இருக்க தண்ணீரை பீய்ச்சி அடித்து தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரப்பர் பொருட்கள் எரிந்து கரும்புகை மேல்நோக்கி சென்றதில் அப்பகுதியில் கண்ணெரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இந்த தீ விபத்து காரணமாக பரபரப்பு நிலவியது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!