வீடு கட்டும் பணியின் போது ஜேசிபி மின் ஒயரில் உரசியதால் ஏற்பட்ட தீ விபத்து

வீடு கட்டும் பணியின் போது ஜேசிபி மின் ஒயரில் உரசியதால் ஏற்பட்ட தீ விபத்து
X
மின்கம்பத்தில் உள்ள ஒயர்கள் தீப்பிடித்து எரிந்த காட்சி.
பொன்னேரி அருகே வீட்டு கட்டுமான பணிக்காக பயன்படுத்தப்பட்ட ஜே. சி பி. இயந்திரம் அருகில் உள்ள மின் ஒயரில் உரசி தீ விபத்து ஏற்பட்டது.

பொன்னேரி அருகே வீட்டு கட்டுமான பணிக்காக வீட்டு அருகே ஜேசிபி எந்திரம் மூலம் பணி செய்து கொண்டிருந்தபோது மின் கம்பத்தில் உள்ள ஒயரில் பட்டு தீப்பொறிப் பறந்து தீபாவளி பட்டாசுகள் போல் பற்றி எரிந்த மின் கம்பம் மின் இணைப்பு துண்டித்து தீ விபத்து ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே தடப் பெரும்பாக்கம் வெங்கடபதி நாயுடு நகர் பகுதியில் வீடு கட்டுமான பணிக்காக ஜேசிபி எந்திரம் மூலம் மண் அள்ளி கொட்டும் பணி நடைபெற்று வருகிறது இந்நிலையில் கட்டுமானம் நடைபெறும் இடத்தின் அருகே இருந்த மின் கம்பத்தில் மீது ஜேசிபி உரசியதில் திடீரென தீப்பற்றி தீபாவளி பட்டாசு போல் பொரிந்து தள்ளி பற்றி எறிய ஆரம்பித்தது.

இதில் மின்கம்பத்தில் சுற்றி இருந்த ஒயர்கள் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக எரிந்து சாம்பலானது இதை கண்ட அக்கம் பக்கத்தினர் மின்வாரிய அதிகாரிகளுக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி மின்வாரிய அதிகாரிகள் வந்து அப்பகுதியில் மின் இணைப்பை துண்டித்து மின் ஒயர்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் மின்கம்பம் திடீரென தீ பற்றி எரிந்த காட்சிகளை பார்த்த பொதுமக்கள் தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்தடை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!