பொன்னேரி அருகே சாலையில் கவிழ்ந்த கண்டெய்னர் லாரி: போக்குவரத்து நெரிசல்

கவிழ்ந்து கிடக்கும் கண்டெய்னர் லாரி.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி காட்டுப்பள்ளியில் உள்ள அதானி துறைமுகத்தில் இருந்து சரக்குகளை ஏற்றி கொண்டு கன்டைனர் லாரி ஒன்று மணலி ஆண்டார்குப்பம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தது.
மணலி புதுநகர் அருகே வெள்ளிவாயல்சாவடி பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது லாரி ஓட்டுநர் மதுபோதையில் இருந்த காரணத்தினால் லாரி சென்று கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையில் கவிழ்ந்தது.
இதனால் பொன்னேரி - திருவொற்றியூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்து போலீசார் கிரேன் வரவைத்து அதன் உதவியுடன் சாலையில் கவிழ்ந்த கன்டைனர் லாரியை மீட்டு சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர்.
இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அப்பகுதி போக்குவரத்து நெரிசலால் மிகவும் பாதிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu