மகிமை மாதா திருக்கோவிலில் 508ம் ஆண்டு பெருவிழா

மகிமை மாதா திருக்கோவிலில் 508ம் ஆண்டு பெருவிழா
X

பழவேற்காடு புனித மகிமை மாதா திருக்கோவிலில் 508ம் ஆண்டு பெருவிழாவின் கொடியேற்றம்.

பொன்னேரி அருகே பழவேற்காடு புனித மகிமை மாதா திருக்கோவிலில் 508ம் ஆண்டு பெருவிழா நேற்றிரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பொன்னேரி அருகே பழவேற்காடு புனித மகிமை மாதா திருக்கோவிலில் 508ம் ஆண்டு பெருவிழா நேற்றிரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் பங்கேற்று கூட்டு பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட பழவேற்காட்டில் அமையப்பெற்றது ஆயிரம் ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த புனித மகிமை மாதா ஆலயம்.

இ்ந்த ஆலயத்தில் 508.ம் ஆண்டு பெருவிழா நேற்றிரவு வெகு விமர்சையாக கொடியேற்றதுடன் தொடங்கியது. முன்னதாக மாவட்டத்தின் சென்னை, திருவள்ளூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், மணலி, சோழவரம், கவரப்பேட்டை, ஆரம்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிருஸ்துவமக்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியும் சிலுவை கொண்டும், கொடியினை ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக ஆலயத்திற்கு வந்தனர்.

தொடர்ந்து ஆலய கொடிமரத்தில் புனித அன்னை மகிமை மாதா திருஉருவ கொடியேற்றி தேர்த்திருவிழாவை தேவாலயத்தில் துவக்கிவைத்தனர். இதனையடுத்து தேவாலயத்தில் கூட்டு திருப்பலி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மேலும் முக்கிய நிகழ்வான தேர்பவனி வரும் 22ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai solutions for small business