கள்ளச் சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை செய்த பெண் உள்பட 5.பேர் கைது
கள்ளச்சந்தையில் மது விற்றதாக கைது செய்யப்பட்டவர்கள்.
பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் காந்தி ஜெயந்தி விடுமுறை நாளில் கள்ளச்சந்தையில் மதுவிற்ற 5.பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.23000 மதிப்புள்ள 150 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
காந்தி ஜெயந்தி தினமான நேற்று தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டிருந்தது. அரசு உத்தரவையும் மீறி நேற்று பல்வேறு இடங்களில் கள்ளச் சந்தையில் மது விற்பனையை தடுக்க மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.இதில் பொன்னேரி மற்றும் பெரியபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டபோது மது விற்பனையில் ஈடுபட்டவர்களை மடக்கிப் பிடித்தனர்.
பொன்னேரியில் மது விற்பனையில் ஈடுபட்ட தென்றல் சாந்தி என்ற பெண், பெரியபாளையம் சுற்றுப்பகுதிகளில் மது விற்ற முனுசாமி, விஜி, சரவணன், சீனிவாசன் ஆகிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சுமார் 23000 ரூபாய் மதிப்புள்ள 150 மது பாட்டில்களையும் அவர்களிடமிருந்து மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்ய முயன்ற 5 பேரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் இது குறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில் பெரியபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் அரசு விடுமுறை உள்ளிட்ட நாட்களில் கள்ளச் சந்தையில் அதிக அளவில் மது விற்பனை நடைபெற்று வருவதாகவும், போலீசாருக்கு தெரிந்தும் இதுவரை அவர்கள் மீது எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu