/* */

ஒரு நிமிடம் 58 விநாடிகளில், 500 மீட்டர் கடந்து சைக்கிளிங்கில் 4 வயது சிறுவன் சாதனை

பொன்னேரியில் 1 நிமிடம் 58 வினாடிகளில் 500 மீட்டர் கடந்து சைக்கிளிங்கில் 4 வயது சிறுவன் உலக சாதனை படைத்தது, பாராட்டுகளை பெற்றுள்ளது.

HIGHLIGHTS

ஒரு நிமிடம் 58 விநாடிகளில்,  500 மீட்டர் கடந்து சைக்கிளிங்கில் 4 வயது சிறுவன் சாதனை
X

சாதனை சிறுவன் ஷவின் தனது பெற்றோருடன். 

பொன்னேரியில் நான்கு வயது சிறுவன் சைக்கிளிங்கில் புதிய உலக சாதனை படைத்த நிலையில், கிராம மக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த நவீன் - சந்தியா தம்பதியரின் மகன் ஷவின்.இந்த சிறுவன் இரண்டு வயதிலிருந்தே சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் கொண்டுள்ளார்.ஷவினின் ஆர்வத்தை உணர்ந்த அவரது பெற்றோர் சைக்கிள் வேகமாக ஓட்டுவதற்கு கற்று கொடுத்துள்ளனர்.


தற்போது நான்கு வயது நிரம்பிய இந்த சிறுவன் ஷவீன் சாலையில் 500 மீட்டர் தூரத்தை ஒரு நிமிடம் 58 வினாடிகளில் சைக்கிளை அதி வேகமாக ஓட்டி புதிய உலக சாதனையை படைத்துள்ளார். இவரது சாதனை சோலன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெகார்ட் என்ற நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டு உலக சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. உலக அளவில் சிறு வயதில் சைக்கிளை வேகமாக ஓட்டி உலக சாதனை படைத்தது இதுவே முதன்முறை என்பது சிறப்பம்சமாகும். சைக்கிளிங்கில் உலக சாதனையை உருவாக்கியுள்ள ஷவீனுக்கு கிராம மக்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

Updated On: 15 Jun 2024 5:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மனைவி இறந்த சில நிமிடங்களில் துக்கம் தாளாமல் ஐபிஎஸ் அதிகாரி
  2. ஈரோடு
    ஈரோட்டில் விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற கார்: சிசிடிவி...
  3. நாமக்கல்
    நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் 420 மூட்டை பருத்தி ஏலம் மூலம்
  4. கோவை மாநகர்
    பொள்ளாச்சி தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு
  5. வணிகம்
    இந்தியாவின் மதிப்புமிக்க பிரபலம் யார் தெரியுமா..?
  6. கல்வி
    பூமியின் முதல் செல் எப்படித் தோன்றியது..? இந்திய விஞ்ஞானிகள்...
  7. நாமக்கல்
    எருமப்பட்டியில் நாளை, நாமக்கல்லில் 20ம் தேதி மின்சார நிறுத்தம்...
  8. நாமக்கல்
    கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பஸ் பர்மிட்டை ஏன் ரத்து...
  9. சுற்றுலா
    ஜாலியா ஒரு டூர் போவோமா..? மனசு லேசாகும்ங்க..!
  10. கல்வி
    விமானி பயிற்சி பள்ளியை அமைக்கும் ஏர் இந்தியா