சோழவரம் அருகே கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது
கைது செய்யப்பட்ட மூவர்.
Cannabis Drug -திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த அருமந்தை கிராமத்தில் உள்ள சுடுகாடு அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த மூன்று பேரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் அருமந்தை கிராமத்தை சேர்ந்த ராஜா வயது 20, பாடியநல்லூரைச் சேர்ந்த சபரி வயது 23 , சோழவரத்தைச் சேர்ந்த அபினாஷ் வயது 21 என்பதும் இவர்கள் கஞ்சா புகைக்க அருமந்தை சுடுகாடு அருகே நின்று கொண்டிருந்ததும் தெரிய வந்தது.
இதணை தொடர்ந்து அவர்களிடம் இருந்த 40 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த சோழவரம் போலீசார், இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu