மீஞ்சூர் அருகே நாயை கத்தியால் வெட்டிக்கொன்ற 3 பேர் கைது

மீஞ்சூர் அருகே நாயை கத்தியால் வெட்டிக்கொன்ற 3 பேர் கைது
X

நாயை வெட்டிக்கொன்றதாக கைது செய்யப்பட்ட மூவர்.

மீஞ்சூர் அருகே நாயை கத்தியால் வெட்டிக்கொன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மீஞ்சூர் அருகே நாயை கத்தியால் வெட்டிக்கொன்ற மூவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, மீஞ்சூர் அடுத்த, அத்திப்பட்டு அன்பழகன் நகரை சேர்ந்தவர் புவனேஷ்வர் (வயது27). கடந்த சில நாட்களுக்கு முன் இவரது நண்பர் கிரண் என்பவரை சிலர் தாக்கி கொண்டிருந்த போது அதனை தடுக்க சென்ற புவனேஸ்வர் அரிவாளால் வெட்டப்பட்டார்.

இதில் பலத்த காயமடைந்த புவனேஸ்வர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக மீஞ்சூர் காவல்துறையினர் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் மீண்டும் புவனேஸ்வரை வெட்டிய மூவரும் அவரது வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டனர். அப்போது புவனேஸ்வரின் நாய் அவர்களை பார்த்தது குரைத்ததால் ஆத்திரத்தில் அவர்கள் கொண்டு வந்த கத்தியால் நாயை வெட்டினர். இதில் நாய் அந்த இடத்திலேயே துடி துடித்து செத்தது.

இதுகுறித்து புவனேஸ்வர் மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் நாயை கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்து சங்கர் (23), பிரபாகரன் (22), ரோகித் (22) ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி உத்தரவின் அடிப்படையில் காவல்துறையினர் அவர்களை புழல் சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
ai solutions for small business