குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேர் கைது

குட்கா பதுக்கி வைத்து  விற்பனை செய்த 3 பேர் கைது
X

குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேர் கைது (பைல் படம்)

பொன்னேரி அடுத்த மீஞ்சூரில் குட்கா போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மீஞ்சூரில் குட்கா பொருட்களை கடையில் பதுக்கி விற்பனை செய்த மூவர் கைது. 50 கிலோ குட்கா பொருட்கள், இருசக்கர வாகனம் பறிமுதல்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, மீஞ்சூரில் கடையில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் கடைகளில் ஆய்வு செய்த போது இரண்டு கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து கூடுதல் விலைக்கு கடையில் பதுக்கி குட்கா விற்பனையில் ஈடுபட்டு வந்த சீனிவாசன், அஜித்குமார், அப்துல் காதர் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். மேலும் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 கிலோ குட்கா பொருட்கள், இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!