உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து மூவர் காயம் - இருவரிடம் விசாரணை

உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து மூவர் காயம் - இருவரிடம் விசாரணை
X

கோப்பு படம்

மீஞ்சூரில், உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து 3 பேர் காயமடைந்தனர். பாதுகாப்பற்ற முறையில் பணியாற்றிய இருவரிடம், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பஜாரில், தனியாருக்கு சொந்தமான பழைய கட்டிடம், ஜேசிபி இயந்திரம் மூலம் இடிக்கும் பணிகள் நடந்து வருகிறது. ஜேசிபி எந்திரத்தை இயக்கிக் கொண்டிருந்த போது, மேலே சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின்கம்பி மீது மோதி, அதை இழுத்ததில் அறுந்து கீழே விழுந்தது.

இந்த விபத்தில், அங்கு பூக்கடை வைத்திருந்த 2 பெண்கள், இரு சக்கர வாகனத்தில் சென்றவர் என மூவர் மீது மின்கம்பி விழுந்தது. அவர்கள் மூவரும், மின்சாரம் தாக்கி காயமடைந்தனர். காயமடைந்தவர்களை பொதுமக்கள் அவர்களை மீட்டு மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பலத்த காயமடைந்த பூ வியாபாரி கீதாவை மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்து போலீசார், சம்பவ இடத்திற்கு வந்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த மீஞ்சூர் போலீசார், பாதுகாப்பற்ற முறையில் கட்டிடத்தை இடிக்கும் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் மாடசாமி, ஜேசிபி ஆப்ரேட்டர் நாகராஜ் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!