முன்விரோதம் காரணமாக மளிகை கடை உரிமையாளரை தாக்கிய, 3 பேர் கைது

முன்விரோதம் காரணமாக மளிகை கடை உரிமையாளரை தாக்கிய, 3 பேர் கைது
X

பைல் படம்

காந்திநகர் பகுதியில் முன்விரோதம் காரணமாக மளிகை கடை உரிமையாளரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த காந்திநகர் பகுதியில் வசிப்பவர் உஷா என்பவரின் கணவர் ரங்கசாமி காந்தி நகர் பகுதியில் மளிகை கடை வைத்து வருகிறார்.

முன்தினம் மாலை 6 மணியளவில் மளிகை கடையில் இருந்த பொழுது முன்விரோதம் காரணமாக மூன்று நபர்கள் அத்துமீறி கடையில் நுழைந்து ரங்கசாமியை தகாத வார்த்தைகளால் பேசி, கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விட்டுச் சென்றனர்.

இச்சம்பவம் குறித்து சோழவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்ததில் ஆட்டந்தாங்கல் பகுதியை சேர்ந்த அஜித்குமார், கண்ணகி, ராணி ஆகிய மூன்று நபர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!