பொன்னேரி அருகே தனியார் பள்ளிக்கு 2வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

பைல் படம்.
Bomb Threat Call -திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பஞ்செட்டியில் வேலம்மாள் மெட்ரிக் பள்ளி வளாகம் உள்ளது. இதில் 4பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளில் சுமார் 4000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். நேற்று காலை வழக்கம் போல பள்ளி செயல்பட தொடங்கிய நிலையில் வேலம்மாள் பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக ஒரு மிரட்டல் ஒன்று வந்தது.
இதனைத் தொடர்ந்து நேற்று பள்ளிக்கு விடுமுறை அளித்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைத்து சோதனை நடத்தியதில் வெறும் புரளி என்று தெரிய வந்தது. இந்நிலையில் நேற்றிரவு மீண்டும் 2வது முறையாக பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்துள்ளது.
இதனையடுத்து மீண்டும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு உள்ளதா என நள்ளிரவு முதல் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் அதிகாலையிலேயே இன்று பள்ளிக்கு விடுமுறை என பள்ளி நிர்வாகம் பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியது. 2வது முறையாக வந்த வெடிகுண்டு மிரட்டல் காரணமாக 2வது நாளாக பள்ளிக்கு விடுமுறை அளித்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே வெடிகுண்டு மிரட்டல் வந்த வாட்சப் எண் வெளிநாட்டில் இருந்து வந்தது போல் இருப்பதால் மிரட்டல் விடுத்தது யார் என கண்டறிய முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu