பொன்னேரி அருகே 2 அரசு பேருந்து கண்ணாடிகள் உடைப்பு

பொன்னேரி அருகே 2 அரசு பேருந்து  கண்ணாடிகள் உடைப்பு
X

பஸ் கண்ணாடி உடைப்பு ( கோப்பு படம்)

பொன்னேரி அருகே இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ஒரு தரப்பினர் மீது வழக்கு பதிவு காரணமாக இரண்டு பேருந்துகள் கண்ணாடி உடைக்கப்பட்டதா என போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

பொன்னேரி அருகே 2அரசு பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்தில் பயணித்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில் ஒருதரப்பினர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்ததால் கண்ணாடி உடைக்கப்பட்டதா என போலீஸ் விசாரணை நடத்துகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இருந்து கள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது சின்னக்காவனம் பகுதியில் மர்ம நபர்கள் சிலர் கல் வீசி தாக்கியதில் பேருந்தின் முன் பக்க கண்ணாடியும், பின் பக்க கண்ணாடியும் உடைந்தன. அதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அலறியடித்து அச்சத்தில் பேருந்தில் இருந்து கீழே இறங்கினர்.

சிறிது நேரத்தில் மாற்று பேருந்து வரவழைக்கப்பட்ட நிலையில் அந்த பேருந்தின் கண்ணாடியையும் மர்ம நபர்கள் கல் வீசி உடைத்து சேதப்படுத்தினர். இதுகுறித்து அளிக்கப்பட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி காவல்துறையினர் மற்றுமொரு மாற்று பேருந்தை வரவழைத்து பயணிகளை அங்கிருந்து பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

சின்னக்காவனம் கிராமத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில் ஒருதரப்பினர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்ததால் அதனை கண்டிக்கும் வகையில் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதா என்ற கோணத்தில் பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பேருந்து கண்ணாடி உடைப்பு தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொன்னேரி போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். அடுத்தடுத்து 2 அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் கல் வீசி தாக்கி உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!