பொன்னேரியில் 3 இடங்களில் அடுத்தடுத்து 15 சவரன் தங்க நகை பறிப்பு

பொன்னேரியில் 3 இடங்களில் அடுத்தடுத்து 15 சவரன் தங்க நகை பறிப்பு
X
பொன்னேரியில் 3 இடங்களில் அடுத்தடுத்து 15 சவரன் தங்க நகை பறித்த கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பொன்னேரியில் ஒரே நாளில் பட்டப்பகலில் அடுத்தடுத்து 3இடங்களில் மூவரிடம் 15சவரன் தங்க நகை பறிக்கப்பட்டது. ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்து கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே ஒரே நாளில் பட்டப்பகலில் 3இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். லிங்கப்பையன்பேட்டை பகுதியில் மளிகை கடை நடத்தி வருபவர் மூதாட்டி மதராசம்மாள். இன்று காலை இவர் தமது கடையில் இருந்த போது பொருள் வாங்குவது போல ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் மூதாட்டி கழுத்தில் இருந்த 5.5சவரன் தாலி சங்கிலியை பறித்து கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றார். இதே போல வெள்ளக்குளம் பகுதியில் தமது மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மூதாட்டி சரோஜாம்மாள் கழுத்தில் இருந்த 7.5சவரன் தாலி சங்கிலியை பறித்து கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் தப்பி சென்றனர். அயநல்லூர் கிராமத்தில் தோட்டத்தில் வெண்டைக்காய் பறித்து கொண்டிருந்த முனுசாமி மற்றும் அவரது மகன் பிரபாகரன் ஆகியோரிடம் வெண்டைக்காய் வாங்குவது போல வந்து 2சவரன் தங்க சங்கிலி மற்றும் 2 செல்போன்களை பறித்து கொண்டு மர்ம நபர்கள் தப்பி சென்றனர்.

ஒரே நாளில் பட்டப்பகலில் அடுத்தடுத்து 3இடங்களில் 15சவரன் தங்க நகை பறிக்கப்பட்டது. இந்த சம்பவங்கள் தொடர்பாக பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி காவல் நிலையங்களில் அளிக்கப்பட புகாரின் பேரில் காவல்துறையினர் சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் அடுத்தடுத்து கைவரிசை காட்டியுள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் அடுத்தடுத்து நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ai solutions for small business