12 கிலோ கஞ்சா பறிமுதல்; தப்பி ஓடிய குற்றவாளிகளுக்கு வலைவீச்சு

12 கிலோ கஞ்சா பறிமுதல்; தப்பி ஓடிய குற்றவாளிகளுக்கு வலைவீச்சு
X
தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் வாகன சோதனையின் போது மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்த 12 கிலோ கஞ்சா பறிமுதல்; தப்பி ஓடிய குற்றவாளிகளுக்கு வலைவீச்சு.

தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் வாகன சோதனையின் போது மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்த 12 கிலோ கஞ்சா பறிமுதல்; தப்பி ஓடிய குற்றவாளிகளுக்கு வலைவீச்சு.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் வெங்கல் காவல் நிலைய போலீசில் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெரிய பாளையத்தில் இருந்து தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் நோக்கி வந்த ஒரு மோட்டார் சைக்கிளை போலீசார் நிறுத்துமாறு கூறினார்.

ஆனால் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் திடீரென தப்பி ஓடினர். எனவே போலீசார் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் கொண்டு வந்த பையை சோதனை செய்தனர். அதில் சுமார் 12 கிலோ கஞ்சா இருந்ததை கண்டு பிடித்தனர். எனவே போலீசார் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தப்பி ஓடிய குற்றவாளிகள் யார், எங்கிருந்து கஞ்சாவை கடத்தி வந்தனர், எங்கு கடத்தி செல்கின்றனர், முழு ஊரடங்கின் போது இவர்கள் தைரியமாக கடத்தலில் ஈடுபட காரணம் என்ன என்று பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!