ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 110 மதுபாட்டில்கள் திருவள்ளூரில் பறிமுதல்!

ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 110 மதுபாட்டில்கள் திருவள்ளூரில் பறிமுதல்!
X

பறிமுதல் செய்யப்ப்டட மதுபாட்டில்கள், கைதான இருவரை காணலாம்.

ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 110 மதுபாட்டில்கள் திருவள்ளூரில் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த காட்டூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வினோத் குமார் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கும்மிடிப்பூண்டியில் இருந்த திருப்பாலைவனம் வழியாக காட்டூர் பஜார் பகுதியில் சென்னையை நோக்கி செல்வதற்கு சொகுசு கார் ஒன்று வந்தது.

அதை மடக்கி சோதனையிட்டபோது, ஆந்திராவில் இருந்து 110 மது பாட்டில்கள் காருக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடத்தி வரப்பட்ட வினோத், அசாக் ஆகிய 2 பேரை போலீசார் கைதனர். மேலும் சட்ட விரோதமாக மகடத்தப்பட்ட துபாட்டில்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்