பொன்னேரி அருகே அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தின் சார்பில் 40 ஆம் ஆண்டு விளக்கு பூஜை

500க்கும் மேற்பட்ட பெண்கள் முகக்கவசங்கள் அணிந்து கையில் விளக்குகள் ஏந்தி ஐயப்ப சரண கோஷத்துடன் பங்கேற்றனர்



திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருவேங்கடாபுரத்தில் ஐயப்ப சுவாமி விளக்கு பூஜை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி எளிமையாக நடைபெற்றது. திருவேங்கடாபுரத்தில் உள்ள அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தின் சார்பில் ஆண்டு தோறும் மார்கழி மாதத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 40ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜையை முன்னிட்டு திருவேங்கடாபுரத்தில் உள்ள ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் விழா தொடங்கியது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி முகக்கவசங்கள் அணிந்தபடி 500க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்குகளை கையில் ஏந்தியபடி ஸ்வாமியே சரணம் ஐயப்பா என சரண கோஷம் முழங்க சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயம் வரை ஊர்வலமாக சென்றனர்.

விளக்கு பூஜையின் போது நடைபெற்ற இரவை பகலாக மாற்றிய வான வேடிக்கைகள் காண்போரை கண்கவர்ந்தது. கேரள பாரம்பரிய வாத்தியமான செண்டை மேளம் மற்றும் பக்தர்களின் சரண கோஷம் அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது. இந்த திருவிளக்கு பூஜையில் திருவேங்கடாபுரம், வேண்பாக்கம், தடப்பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு ஐயப்ப சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வழக்கமாக 2000க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொள்ளும் இந்த விளக்கு பூஜையில் கொரோனா வழிகாட்டுதல் காரணமாக குறைந்த அளவிலான பெண்களே முகக்கவசங்கள் அணிந்து பங்கேற்று ஐயப்பனை வழிபட்டு சென்றனர்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself