பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தந்தை மரணம் -சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் அஞ்சலி!

பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தந்தை மரணம் -சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் அஞ்சலி!
X
பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தந்தை உடல் நலக்குறைவால் மரணம் - சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் அஞ்சலி.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரின் தந்தை துரை (82) நேற்று மாலை உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார். பொன்னேரி அருகே கும்மனூரில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு பொதுமக்கள் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் டி.ஜே. கோவிந்தராஜன், சுதர்சனம் உள்ளிட்டோர் நேரில் வந்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநில செயல் தலைவரும் எம்பியுமான ஜெயக்குமார் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தந்தையின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து கும்மனூர் கிராமத்தில் உள்ள மயானத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி