குன்னமஞ்சேரி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்ற நபர் கைது!

குன்னமஞ்சேரி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்ற நபர் கைது!
X
குன்னமஞ்சேரி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்ற நபர் கைது; 1கிலோ கஞ்சா பறிமுதல்.

குன்னமஞ்சேரி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்ற நபர் கைது 1கிலோ கஞ்சா பறிமுதல்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த குன்னமஞ்சேரி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா அதிகமான அளவில் விற்பதாக பொன்னேரி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்ததும் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வேலுமணி தலைமையில் தனிப்படை அமைத்து சம்பவ இடத்திற்கு சென்றனர்.

அங்கு போதை தரக்கூடியதாக வைத்திருந்த 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கஞ்சா வைத்திருந்த நபர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர். போலீசார் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டதில் மணிவண்ணன் கோபி, மோகன் ஆகிய மூன்று நபர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!