காவலருக்கு கொரோனா - காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிப்பு.

காவலருக்கு கொரோனா - காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிப்பு.
X
அனைவருக்கும் கபசுரக் குடிநீர்.

பென்னலூர்பேட்டை காவல்நிலையத்தில் காவலருக்கு கொரோனா தொற்று உறுதியானது; காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிப்பு.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த அமைந்துள்ள பென்னலூர் பேட்டை காவல் நிலையத்தில் பணிபுரியும் 30 காவலர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 40 வயது மதிக்கத்தக்க முதன்மை காவலருக்கு கொரோனா உறுதியானதையடுத்து அவர் வீட்டிலே தனிமைப் படுத்திக் கொண்டார்.

இதனையடுத்து காவல் நிலையம் முழுவதும் தூய்மைப் பணியாளரால் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் காவலர்கள் அனைவருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!