முழு ஊரடங்கின் போது போலீஸ் தீவிர வாகன சோதனை - ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவுரை.

முழு ஊரடங்கின் போது போலீஸ் தீவிர வாகன சோதனை - ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவுரை.
X
பொன்னேரியில் போலீஸ் பொதுமக்களுக்கு அறிவுரை.

முழு ஊரடங்கு பொன்னேரியில் போலீஸ் தீவிர வாகன சோதனை; ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவுரை.

கொரோனா இரண்டாம் அலை பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் மட்டுமே பிற்பகல் 12 மணி வரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொன்னேரியில் முழு ஊரடங்கு காரணமாக காய்கறி, மளிகை கடை உள்ளிட்ட கடைகள் மட்டுமே இருந்துள்ளன. சாலையில் செல்லும் வாகனங்களை மறித்து போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

முக்கிய சந்திப்புகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் போலீசார், ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர். முகக் கவசங்கள் அணிந்து வரவேண்டும், கடைகளில் தனிமனித இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் மற்றும் அத்தியாவசிய தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என பொதுமக்களுக்கு பொன்னேரி காவல் ஆய்வாளர் மார்ட்டின் பிரேம்ராஜ் ஒலிபெருக்கி மூலம் அறிவுரை வழங்கி வருகிறார். இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!