அதானி துறைமுக விரிவாக்கம்: திமுக கருத்து கேட்பு

அதானி துறைமுக விரிவாக்கம்: திமுக கருத்து கேட்பு
X
அதானி துறைமுக விரிவாக்கம்: திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் கருத்து கேட்பு

சென்னை அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள அதானி துறைமுகத்தை விரிவாக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெறுவதாக இருந்த கருத்து கேட்பு கூட்டம் கடும் எதிர்ப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி தலைமையில் திமுகவினர் காட்டுப்பள்ளியில் உள்ள கிராம மக்களிடம் குறைகள் கேட்டறிந்தனர். மீன்வளம் அழிந்து வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்படும் என மீனவ கிராம மக்கள் அச்சம் தெரிவித்தனர். துறைமுக விரிவாக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நித்தியானந்த் ஜெயராமன், பூவுலகின் நண்பர்கள் குழுவின் சுந்தர்ராஜன் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

காற்று மாசுபாடு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு வருவதாகவும், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் என அனைத்து தரப்பினரும் கிராமத்த்தை விட்டு வெளியேறும் சூழல் நிலவி வருவதாக மக்கள் கூறியதாக தெரிவித்தார். மேலும் மீன்வளம் அழிந்து கடல் உட்புகுந்து பேரழிவை ஏற்படுத்தி வருவதாகவும், பக்கிங்காம் கால்வாயும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும், மழைக்காலங்களில் வெள்ளநீர் எளிதில் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கார்த்திகேய சிவசேனாதிபதி தெரிவித்தார். சுற்றுச்சூழல் சீர்கேடுகள் குறித்து மக்கள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!