அதானி துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கு எதிர்ப்பு

சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் அதானி துறைமுகம் இயங்கி வருகிறது. 330 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வரும், இந்தத் துறைமுகத்தை மேலும் 6110 ஏக்கர் பரப்பளவில் 54 நான்காயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்வதற்காக மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக ஆழ்கடல் பகுதியில் 350 முதல் 400 அடி ஆழத்திற்கு மணல் அல்ல பட உள்ளது. மேலும் சரக்கு வாகனங்கள் நிறுத்துவதற்காக கடற்கரைப்பகுதியில் உள்ள மீனவ கிராமங்கள் அகற்றப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால், பழவேற்காடு, எண்ணூர், சுண்ணாம்புகுளம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள், மற்றும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர், இந்த நிலையில் அதானி துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து.
மீஞ்சூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அதானி துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கு மத்திய அரசு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஊர்வலமாகச் சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu