வலையில் சிக்கி மீனவர் உயிரிழப்பு

வலையில் சிக்கி மீனவர் உயிரிழப்பு
X
ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் தவறி விழுந்து அதே வலையில் சிக்கி உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே அவுரிவாக்கம் கீழ்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சிகாமணி(54), இவர் பழவேற்காடு ஏரியில் உறவினர்களான சீராளன், ராஜேஷ் ஆகியோருடன் சேர்ந்து பழவேற்காடு ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக, தவறி விழுந்த போது நீரோட்டம் அதிகமாக இருந்த காரணத்தால் தண்ணீரில் மூழ்கி வலையில் சிக்கி மாட்டிக்கொண்டார். உடனிருந்த மீனவர்கள் அவரை வலையிலிருந்து மீட்பதற்குள் உயிரிழந்துவிட்டார்.

இதுகுறித்து திருப்பாலைவனம் காவல் துறையினருக்கும், வருவாய் மற்றும் மீன்வளத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் திருப்பாலைவனம் காவல் துறையினர், வருவாய் மற்றும் மீன்வளத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!