பாமகவின் போராட்டம் சீட்டுக்கும் நோட்டுக்குமானது - வேல்முருகன் சாடல்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பஞ்செட்டியில் மாற்று கட்சிகளில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணையும் விழா நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் பங்கேற்று மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு சால்வை அணிவித்து கட்சியில் இணைத்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன் பாமகவின் 20% இட ஒதுக்கீடு போராட்டம் சீட்டுக்கும், நோட்டுக்குமான பேரம் மட்டுமே என விமர்சித்தார். வன்னியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வழக்கு தொடுத்து இட ஒதுக்கீடு கிடைக்க உள்ள நிலையில் வழக்கு தொடுத்தவர்களுக்கு பெயர் கிடைத்து விடும் என்பதாலும், தேர்தல் வரை தமது கட்சி தொண்டர்களை தக்க வைக்கவே ராமதாஸ் போராட்டம் நடத்தி வருவதாக வேல்முருகன் குற்றச்சாட்டினார். 7தமிழர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுகிறது என குற்றம் சாட்டினார்.
மருத்துவ மாணவர்களுக்கு 7.5% சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் கவர்னர் ஒப்புதல் வழங்காத நிலையிலும் துணிந்து சட்டம் இயற்றியது போல 7 தமிழர்களை விடுவிக்க தமிழக அரசு தமது அதிகாரத்தை பயன்படுத்தி அரசாணை வெயிட்டு ஏன் விடுவிக்கவில்லை என வேல்முருகன் கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் லஞ்சம், ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என விமர்சித்தார். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக திருத்தப்பட்ட 3வேளாண் மசோதாக்களை மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினர். தமிழக வாழ்வுரிமை கட்சி திமுக கூட்டணியில் உள்ளது எனவும் தேர்தல் தேதி அறிவிப்பிற்கு பிறகு தொகுதிகள், சின்னம் குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார். கமல், ரஜினி என யார் வந்தாலும் திமுக கூட்டணியின் வெற்றியை தடுக்க முடியாது எனவும் வரவுள்ள சட்டமன்ற தேர்தலில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்பார் என உறுதிபட கூறினார். யாழ்ப்பாணத்தில் இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் நினைவுத்தூண் அமைக்க இந்திய அரசு இலங்கைக்கு அழுத்தம் தர வேண்டும் எனவும் கூறினார். சசிகலா வருகைக்கு பிறகு தமிழக அரசியலிலும், அதிமுகவிலும் பல்வேறு மாறுதல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் வேல்முருகன் தெரிவித்தார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu