திருவள்ளூர் பலாத்காரம் : எஸ்பி. முக்கிய முடிவு

திருவள்ளூர் பலாத்காரம் : எஸ்பி. முக்கிய முடிவு
X

திருவள்ளூர் மாவட்டத்தில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நபரை கத்தியால் குத்திக் கொன்ற இளம்பெண்ணை தற்காப்புக்காக செய்த கொலை என்ற அடிப்படையில், மாவட்ட போலீஸ் எஸ்.பி., விடுதலை செய்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள ஒரக்காடு அல்லிமேடு பகுதியில் கடந்த ஜனவரி 2 ம் தேதி இரவு 19 வயது மதிக்கதக்க பெண்ணை கத்தி முனையில் இளைஞர் ஒருவர் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இந்த முயற்சியின் போது, இளைஞரிடம் இருந்த கத்தியை பிடுங்கி அவரை அந்த பெண் கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற போது தற்காப்பு காரணமாக அந்த பெண் கொலை செய்ததால் சட்டப்பிரிவு 106-ன் படி திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி அரவிந்தன் அந்த பெண்ணை விடுதலை செய்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தற்காப்புக்காக நடந்த கொலை என நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி. அரவிந்தன் தெரிவித்திருக்கிறார்.

Tags

Next Story
future ai robot technology