பழவேற்காட்டில் சுற்றுலா பயணிகளை தாக்கி சங்கிலி பறிப்பு - வழிப்பறி கும்பல் அட்டகாசம்

பழவேற்காடு சுற்றுலாத் தளத்தை பார்வையிட குடும்பத்தினரும் வந்தவரை வழிப்பறி கும்பல் சரமாரியாக தாக்கியதோடு, 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி.



பழவேற்காடு சுற்றுலாத் தளத்தை பார்வையிட சென்னை கொளத்தூரை சேர்ந்த வல்லிக்கண்ணனும் அவரது குடும்பத்தினரும் வந்துள்ளனர். அப்போது கடற்கரையில் குளிக்கச் சென்ற இடத்தில் 4 பேர் கொண்ட கும்பல் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அச்சம் அடைந்த அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு வரும் வழியில், வழிமறித்த அந்த கும்பல் சரமாரியாக தாக்கியதோடு அம்மு என்பவர் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து அந்த கும்பல் தப்பிச் சென்றதாக தெரிகிறது.


வழிப்பறி கும்பல் தாக்கியதில் பலத்த காயமடைந்த வல்லிக்கண்ணன், அம்மு ஆகியோர் பொன்னேரி அரசு மருத்துவ மனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டேன்லி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


முன்னதாக அவர்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவம் தொடர்பாக திருப்பாலைவனம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சுற்றுலா பயணிகளை தாக்கி தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற வழிப்பறி கும்பலை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!