தெருக்களில் குப்பைகளை கொட்டினால் நடவடிக்கை: ஆவடி மாநகராட்சி ஆணையர்

தெருக்களில் குப்பைகளை கொட்டினால் நடவடிக்கை: ஆவடி மாநகராட்சி ஆணையர்
X
குப்பைகளை சாலைகள், கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளில் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவடி மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

ஆவடி மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து குப்பை வாகனங்களில் பொதுமக்கள் வழங்க வேண்டும்.

அவ்வாறு குப்பைகளை, குப்பை சேகரிக்க வரும் வாகனங்களில் வழங்காமல் சாலைகள், கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளில் கொட்டினால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது திடக்கழிவு மேலாண்மை திட்டம் விதிகளின் கீழ் அபராதம் விதிப்பதோடு நீதிமன்றம் மூலம் உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் நாள்தோறும் வீடுகளில் சேரும் குப்பைகளை தரம்பிரித்து தூய்மை பணியாளரிடம் வழங்கும் பொதுமக்களுக்கு ஆவடி மாநகராட்சி சார்பில் ஊக்கப்பரிசு வழங்கப்படும். குப்பை இல்லாத தூய்மை மாநகராட்சியாக ஆவடி மாநகராட்சியை கொண்டுவர பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூறியுள்ளார்

Tags

Next Story