திமுக ஆட்சியில் விவசாய கடன்கள் தள்ளுபடி ஸ்டாலின்

திமுக ஆட்சியில் விவசாய கடன்கள் தள்ளுபடி ஸ்டாலின்
X

திமுக ஆட்சி அமைந்ததும் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திருவள்ளூரில் மு.க.ஸ்டாலின் கூறினார்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தை அடுத்த நத்தம் கிராமத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அதில் திமுக தலைவர் ஸ்டாலின், அவருடைய துணைவியார் துர்கா ஸ்டாலினுடன் கலந்து கொண்டார். அப்போது பேசிய ஸ்டாலின், ஆட்சி மாற்றம் வந்த பின் நீட் தேர்வை விலக்க எல்லா விதமான முயற்சியும் உறுதியாக எடுப்பேன் என ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக விவசாயிகளுக்காக குரல் கொடுப்பது திமுக மட்டுமே எனக்கூறிய அவர்,7000 கோடி கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்தது திமுக ஆட்சி தான் எனவும், திமுக ஆட்சிக்கு வந்த உடன் விவசாயிகள் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றார். பச்சை துண்டை போட்டுக்கொண்டு விவசாயிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பச்சை துரோகம் செய்து வருகிறார் என்ற அவர் இதற்கு முடிவு, தை பிறந்தால் வழி பிறக்கும் என்றார்.

Tags

Next Story