சென்னையில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்
சென்னை அடுத்த திருநின்றவூர் தனியார் ஜெயா கலைக்கல்லூரியில் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பாக ஒரு நாள் இலவச வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றுள்ளது.
அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மாவட்ட ஆட்சியர் மாவட்ட வேலைவாய்ப்பு இயக்குனர் வீரராகவ ராவ் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தனர். இந்த வேலைவாய்ப்பு முகாமில் 250 க்கும் மேற்பட்ட இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் அசோக் லேலண்ட், டிவிஎஸ், ரானே பிரேக் போன்ற உற்பத்தித் தொழிற்சாலை நிறுவனங்கள் இந்த முகாமில் பங்கேற்றுள்ளனர்.
முகாமில் கலந்துகொண்டுள்ள நிறுவனங்கள் குறித்த கையேடு வழங்க பட்டது. திருவள்ளூர் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களுக்கு தேவையான நிறுவனங்களில் நேர்முக தேர்வில் பங்கேற்கின்றனர். மாவட்ட வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு படித்த இளைஞர்கள் முதல் பட்டதாரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டுள்ளனர் இவர்களுக்கு 6000 முதல் 30000 வரை சம்பளம் வழங்கக்கூடிய நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன. எனவே மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் என 5000க்கும் மேற்பட்டோர் தற்போது நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர். இந்த நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா மற்றும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பணிநியமன ஆணைகளை வழங்கி உள்ளார்.
மேலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முககவசம் சமூக இடைவெளி உள்ளிட்ட எந்த தடுப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் மாணவர்கள் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக இருப்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu