வடகிழக்கு பருவமழை தீவிரம்: உஷார் நிலையில் தீயணைப்பு துறை

வடகிழக்கு பருவமழை தீவிரம்: உஷார் நிலையில் தீயணைப்பு துறை
X
வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

உடுமலை பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. தொடர்மழையால், குளம், குட்டை உள்ளிட்ட நீர் நிலைகள் திரும்பி வருகின்றன. பருவ மழை பாதிப்புகளை எதிர்கொள்ள, உடுமலை தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிக்குழு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

ரப்பர் படகுகள், கயிறு, மிதவை, உயிர்ப்பான், வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தால் உடனடியாக அற்ற, மின் மோட்டார் உள்ளிட்ட பொருட்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. 'லைப் ஜாக்கெட்' உள்ளிட்ட பொருட்களும் தயார் நிலையில் உள்ளன.

வெள்ள அபாயம் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், கவனமுடன் இருக்க வேண்டும் என, அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. பெரு வெள்ள சமயத்தில், அவர்களை பாதுகாப்பாக தங்க வைக்க, திருமண மண்டபங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Tags

Next Story
ai marketing future